தென்னையில் சிவப்பு ஊசி வண்டு தாக்குதல்; கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவிகள் கள ஆய்வு…!!
செய்தியாளர் பழநி கண்ணன், திண்டுக்கல் மாவட்ட தலைமை செய்தியாளர், மூத்த பத்திரிக்கையாளர், செய்திப்பிரிவு, ‘அக்கப்போர்’ நாளிதழ் Akkappore.com
/ Just CliCK now

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழ கத்தின், வேளாண் பிரிவு 4-ம் ஆண்டு படிக்கும் மாணவ, மாணவிகள் காரமடை அருகே வெள்ளியங்காடு, மருதூர் உள்ளிட்ட பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்டனர். இதில் தென்னையில் சிவப்பு ஊசி வண்டு தாக்குதல் அதிகம் இருப்பது தெரியவந்தது. அதைதடுப் பது குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளிக்கும் நிகழ்ச்சி மரு தூர் பகுதியில் நடைபெற்றது.இது குறித்து வேளாண் கல்லூரி மாணவிகள் கூறு கையில், சிவப்புஊசி வண்டுகள், தென்னை மரத்தின் அடிப் பகுதியில் துளையிட்டு மரத்தின் உள்பகுதியில் சென்றுசேதப்படுத்துகிறது. அதை பிடித்து அழிக்க பக்கெட் டிராப் முறையை பயன்படுத்தலாம். பக்கெட்டின் மூடிப்பகுதியில் வண்டுகளை கவரும் ஜெல்லியை கட்டி தொங்கவிட வேண் டும்.அடிப்பகுதியில் தண்ணீர் மற்றும் மண்எண்ணெய் ஊற்ற வேண்டும். பக்கெட் மூடிக்கும் மூடும் பகுதிக்கு இடையில் வண்டுகள் உள்ளே செல்லும் ஓட்டை இருக்க வேண்டும்.இந்த கவர்ச்சி பொறியில் வண்டுகள் சிக்கிவிடும் என்றனர்.இந்நிகழ்ச்சியில் வேளாண்பல்கலைக் கழக மாணவிகள் பாத்திமா காயத்ரி கோபிகாகோவர்தனிஹதியா ஹனன் ஹரிணி
ஹரிணி ஜனனி ஜெயதித்யா ஆகியோ₹ர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் பழநி கண்ணன், திண்டுக்கல் மாவட்ட தலைமை செய்தியாளர், மூத்த பத்திரிக்கையாளர், செய்திப்பிரிவு, ‘அக்கப்போர்’ நாளிதழ் Akkappore.com
/ Just CliCK now

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed

error

Enjoy this blog? Please spread the word :)