🔴 Breaking News : சென்னை கவர்னர் மாளிகை முன்பு போலீஸ்காரர் கோதண்டபாணி திடீர் தர்ணா போராட்டம்…!! காவல்துறை தடுத்து நிறுத்தியது
சென்னை கவர்னர் மாளிகை முன்பு பாஜக மற்றும் திமுக கொடிகளை எரிக்க முயன்ற கோதண்டபாணியை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். தனது குழந்தைக்கு நேர்ந்த கொடுமைக்கு நீதி கோரி, தமிழ்நாடு காவலராக உள்ள அவர் சாலையின் நடுவே போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கு முன், புதுடில்லி ஜனபத் மெட்ரோ நிலையம் அருகிலுள்ள தேசிய குழந்தை நல ஆணையம் முன்பு, கோதண்டபாணி தனது மகள் பிரதிக்ஷாவுடன் இணைந்து போராட்டம் நடத்தினார். அப்போது இருவரும் கைகளில் கை விலங்கு அணிந்து பாஜக மற்றும் திமுக கொடிகளை எரித்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், இன்று சென்னை கவர்னர் மாளிகை முன்பு மீண்டும் திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட அவர், தனது மகளுக்கு நீதி கிடைக்க மாநில மற்றும் மத்திய அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டினார். “எனது குழந்தைக்கு நீதி கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிட மாட்டேன்” என்று உறுதியுடன் தெரிவித்தார்.
இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed