இந்திய வானிலை ஆய்வுத்துறை மூலம் வானிலை குறித்து தகவல்கள் விவசாயிகளுக்கு தரப்படுகிறது…!! மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தகவல்…!! செய்தி ஆசிரியர் நா.மணிவண்ணன், அக்கப்போர் நாளிதழ், Akkappore.news சொடுக்குங்க

🗓️ பிப்,04, 2026
அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கும், வானிலை முன்னறிவிப்புகளை இந்திய வானிலை ஆய்வுத்துறை அளித்து வருகிறது.

கிராம வேளாண் வானிலை சேவைத் திட்டத்தின் கீழ், அடுத்த ஐந்து நாட்களுக்கு மாவட்ட மற்றும் வட்டார அளவில் நிலவக்கூடிய மழைப்பொழிவு, வெப்பநிலை, ஈரப்பதம், காற்றின் வேகம், காற்றின் திசை ஆகியவை குறித்து வானிலை முன்னறிவிப்புகளை இந்திய வானிலை ஆய்வுத்துறை வழங்கி வருகிறது. அத்துடன், வானிலை தகவல் மற்றும் முன்னறிவிப்பு அடிப்படையில் நாட்டின் 127 வேளாண் பருவநிலை மண்டலங்களில் உள்ள 130 வேளாண் வானிலை கள பிரிவுகள் சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்காக ஆங்கிலம் மற்றும் பிராந்திய மொழிகளில் வாரத்திற்கு இரண்டு முறை (செவ்வாய், வெள்ளி) வேளாண் வானிலை அறிவுரைகளை அளித்து விவசாயிகள் தங்களது அன்றாட வேளாண் நடவடிக்கைகளில் உரிய முடிவுகளை மேற்கொள்வதற்கு உதவுகிறது.

இந்த தகவலை மத்திய புவி அறிவியல் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் மக்களவையில் நேற்று தெரிவித்தார்.

✒️ செய்தி ஆசிரியர் நா.மணிவண்ணன், அக்கப்போர் நாளிதழ், Akkappore.news சொடுக்குங்க

புதிய நாளிதழ்
அக்னிப்புரட்சி Akkapore.news
SpotlightTamilnadu ©️®️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed