
குழந்தைகளை வைத்து ரீல்ஸ் எடுக்கக் கூடாது என்று தெரியாத நீங்களெல்லாம் எப்படி அமைச்சரா இருக்கிறீர்கள் மேடம்…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க
குழந்தைகளை வைத்து ரீல்ஸ் எடுக்கக் கூடாது என்று தெரியாத நீங்களெல்லாம் எப்படி அமைச்சரா இருக்கிறீர்கள் மேடம். அதுவும் அந்தக் குழந்தை கைக் கட்டிக்கொண்டு உங்க முன்னாடி நிற்கிறதே அதுவே மிகப்பெரிய தப்பு இது தெரியாதா மேடம் உங்களுக்கு.
தற்போது இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில் (1-9) பத்துக்குள் தான் மாணவர்கள் இருக்கின்றனர். காமராஜர் திறந்த பள்ளிகள் அனைத்தும் இழுத்து மூடும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கு உங்க ஆளும் வர்க்கத்தின் கொள்கையால். அரசுப்பள்ளிகள் காணாமல் போன பிறகு தான் அரசுப்பள்ளிகளின் மகத்துவம் என்ன என்பது மக்களுக்கு புரியும்.
அப்போது அழுது புரண்டு என்ன செய்ய போகிறோம். இருக்கும் அரசுப்பள்ளிகளிலோ நிறைய பணியிடங்கள் காலியாக இருக்கு. பத்தாண்டுகளுக்கு மேலாகிவிட்டது ஆசிரியர் பணி நிரப்பி. இதெல்லாம் உங்களுக்கு தெரியாதா மேடம்.
இந்த ரீல் எடுப்பதன் மூலம் நீங்கள் சாதித்தது என்ன என்று கொஞ்சம் யோசித்து பாருங்கள் மேடம். இனிமேலாவது பள்ளிகளில் ரீல்ஸ் எடுக்காமல் இருங்கள் மேடம். அரசுப்பள்ளிகளே மக்களின் கல்விக்கு உயிர் மூச்சு.

