பள்ளி வகுப்பறையில் அசட்டு தனமாக பேசி சிக்கிக் கொண்ட பெண் அமைச்சர் கீர்த்தனா…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

”ஒரு சின்னக் கேள்விக்குக் கூடப் பதில் சொல்லத் தெரியல”

ஆகப்பெரும் உழைப்பைச் செலுத்தி நடத்திய ஆய்வின் இறுதியாக ட்வீட்டனா கண்டுபிடித்த இந்த முக்கியமான உண்மையை ஆசிரியர்களிடம் தனியாகச் சொல்லி இருக்கலாம். அசட்டுத்தனம் என்ற போதும் அக்கறை என்று கருதலாம். அந்தக் குழந்தையைப் பயம் போக நட்பாகத் தட்டிக் கொடுத்திருக்க வேண்டும். கைகளைக் கட்டாதே என்று சொல்ல வேண்டும்.
பழம்பஞ்சாங்கங்களை விடக் கடுமையாக நடந்து கொள்வதற்கு எதற்கு ஜென்z அமைச்சர் என்று புரியவில்லை.

விடியோ கேமராக்களின் முன்பாக, முக்கிய அமைச்சர் ஒருவர் கேட்கும் கேள்விக்குச் சிறுமி ஒருவர் பதில் சொல்ல வில்லையென்றாலும் ஓடிப் போகவில்லையே என்று நாம் திருப்பிக் கேட்கலாம்.

அந்த மாணவி எவ்வளவு தூரம் உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டிருப்பார்? அமைச்சர் போன பின்பு அந்த டீச்சர் நல்லவராக இருந்தால் தானும் பாதிக்கப்பட்டிருப்பார், இந்த அமைச்சர் போலவே இருந்தால் அந்தக் குழந்தையைத் திட்டுவார்.

கொஞ்சம் கூட empathy sense எதுவும் இல்லாமல் நம் பள்ளிக் குழந்தைகளின் மனநலத்தைப் பாதிக்கக் கூடிய செயல்களில் அசட்டுத்தனமாய் இறங்குகிறார் ட்வீட்டனா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed