கோவை தொண்டாமுத்தூர் சமூக நீதி மாணவர் விடுதியில் காமராஜர் பிறந்த நாள் விழா…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

கோவை தொண்டாமுத்தூர் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் நினைவு நற்பணி மன்றம் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 124 _ வது ஆண்டு பிறந்தநாள் விழா இனிப்பு வழங்கியும், நோட்டு புத்தகம் மற்றும் பேனா வழங்கி கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு மன்ற தலைவர் டாக்டர் மா. சிவக்குமார் தலைமை ஏற்றார். விடுதி காப்பாளர் திரு ந. மகேஷ் குமார் அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.

சமூக ஆர்வலர்கள் தேரம்பாளையம் எம். மாணிக்கராஜ், துடியலூர் பெ. ஆனந்தகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

சமூக நீதி விடுதி மாணவர்கள் 50 பேருக்கு மன்றத்தின் செயலாளர் சி. வருண், கல்லூரி மாணவி சி. நிவேதா , ஐ. பில்தாஸ் ஆகியோர் இனிப்பு மற்றும் நோட்டு புத்தகம், பேனா வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

விழாவில் எம். ராம்குமார், விஷ்வா,பாலசுப்பிரமணியன், செ. மதுக்குட்டி, வெ. விசால்,கோ. ரித்திகேசவன்,கே. கபில்தேவ், உட்பட 50 கற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழா நிறைவாக ச. சர்மா நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed