
சிந்தனை சிறகு விரிப்போம் …!! சிறப்பு கவிதை – கவிஞர் ச.அன்பு வடிவு, சிங்கப்பூர, அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க
எல்லைத்தாண்டும்
எண்ணங்களுக்கு
எதைக்கொண்டு
வேகத்தடைகள்
போடலாம்.
குனிந்து, வளைந்து,
குதிகால்கள் தூக்கி
நின்று சூரிய வணக்கத்தில்
தரையோ! நாற்காலியோ!
அமர்ந்திருந்தாலும்
அடுத்தடுத்துப் பணியிடை
மாற்றத்தால்
அட என்னத்தான்
அந்த எண்ணத்திலுள்ளது
என்றும் ஓர் எட்டுப்போட்டு
எட்டிப்பார்த்துவிட்டு
திரும்பி வரவும் முடியாதே!
கவிஞர் ச.அன்பு வடிவு
சிங்கப்பூர்



