சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் நடத்திய கருத்தரங்கில் 21-02-2026 காலையில் நான் உரையாற்றிக் கொண்டிருக்கும் நேரத்தில் என் கைப்பேசிக்கு ஒரு அழைப்பு வந்தது,

அழைத்தவர், தமிழக ஆளுநர் மாண்புமிகு R.N. ரவி அவர்களின் நேரடி ஆலோசகர் திரு S.திருஞானசம்பந்தம் அவர்கள், அழைத்த செய்தி நாளை 22-02-2026 ஞாயிற்றுக் கிழமை காலையில் ஆளுநர் தங்களை சந்திக்க விரும்புகிறார்கள் எனவே 10-30 மணியளவில் மக்கள் மாளிகை -Lok bhavan ( ராஜ்பவன்-பழைய பெயர் ) வந்து விடுங்கள் என்று கூறினார்,

ஜனவரி 26 குடியரசு தின விழாவில் கலந்து கொள்ள ஆளுநர் அவர்களிடம் இருந்து அழைப்பிதழ் வந்தபோது, புதுதில்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் கலந்து கொள்ள பிரதமர் அலுவலகத்தில் இருந்து அழைத்ததால் நானும் என் மனைவியும் தில்லி செல்ல வேண்டிய நிலையில் அந்த நேரத்தில் ஆளுநர் மாளிகை செல்ல இயலாத நிலை, தற்போது திடீரென்று இப்பொழுது அழைப்பு வந்ததால் இரவு சென்னையிலேயே தங்கியிருந்து விட்டு அடுத்த நாள் 22-02-26 காலை ஆளுநர் மாளிகை சென்றேன்,

அங்கே மூலிகைச் செடிகள் மீட்டெடுப்பில், ராக்கெட் தொழில் நுட்பத்தில், வேளாண்துறையில், ஆறுகள் மீட்டெடுப்பில் என பல துறையில் சாதனை படைத்த 12 பேர் அழைக்கப் பெற்றிருந்தோம்.

உடன் வந்தவர்கள் என சுமார் 20 பேர் மட்டுமே இருந்தோம் சரியாக காலை 11-00 மணிக்கு வந்த ஆளுநர் அவர்கள், எங்கள் ஒவ்வொருவரையும் அழைத்து மாண்புமிகு பிரதமர் அவர்கள் மனதின் குரல் நிகழ்ச்சியில் அவரவர் துறையில் செய்த சாதனை குறித்துப் பேசிய பிறகு, நீங்கள் செய்ய இருக்கும் பணிகள் பற்றி விரிவாகப் பேசும்படி கூறினார்கள், அவை எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டறிந்து கொண்டு பின்னர் நிறைவாகத் தன் கருத்துக்களைத் தெரிவித்தார்,

எங்களை மதியம் அங்கேயே சாப்பிட்டு செல்லுமாறு கேட்டுக் கொண்டு 12-50 மணியளவில் புறப்பட்டு சென்றார்கள், நாங்கள் சாப்பிட்டு முடித்த பின்னர், எங்கள் 12 பேரையும் அவரவர் கருத்தினை சுருக்கமாக மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கு காணொளி வழியே பதிவு செய்து அனுப்பினார்கள்,

பின்னர் 03-00 மணியளவில் அங்கிருந்து கிளம்பினோம். என்னுடைய அனுபவத்தில் எவ்வித பாராபட்சமும் இல்லாமல் அவ்வத்துறைகளில் ஈடுபாடு கொண்டு உழைப்பவர்களை தேடிக்கண்டறிந்து அவர்களைப் பாராட்டியதோடு நில்லாமல், தொடர்ந்து அதன் பயனை நாட்டிற்குப் பயன்படுமாறு செய்வதில் அவர்கள் முன்னெடுக்கும் இத்தகைய செயல் உண்மையிலேயே போற்றத்தக்கதும், பாராட்டப்படக்கூடிய ஒன்றாகவுமே கருதுகிறேன் .

என்னை அழைத்து துறைசார் கருத்தினையும் அதனை இன்னும் மேம்படுத்திட வேண்டிய வழி வகையினையும் கேட்டறிந்ததோடு வேண்டிய உதவிகளையும் செய்து தருகிறேன் என்று கூறி வழியனுப்பி வைத்திட்ட மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்களுக்கும், ஆளுநர் அவர்களுடைய ஆலோசகர் அவர்களுக்கும் மனம் நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

-தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகம் தமிழ்ப் பண்டிதர் மணி.மாறன்

அக்கப்போர் நாளிதழ், செய்திப்பிரிவு akkappore.news சொடுக்குங்க

அருகு அறக்கட்டளை சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பணியில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed