
மதுரை ஒத்தக்கடை அருகே திருமோகூர் காலமேகப் பெருமாள் கோயிலில் ஆண்டு மாசி மகத்தை முன்னிட்டு கஜேந்திர மோட்ச திருவிழா நரசிங்கத்தில் நடைபெற்று வருகிறது. கள்ளர் வேடத்தில் பெருமாள் பல்லக்கில் நரசிங்கத்திற்கு புறப்பாடு நிகழ்வு….!!

மேலூர்: மதுரை ஒத்தக்கடை அருகே உள்ளது திருமோகூர். இங்கு பிரசித்தி பெற்ற அருள்மிகு காலமேகப் பெருமாள் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டு மாசி மகத்தை முன்னிட்டு கஜேந்திர மோட்ச திருவிழா நரசிங்கத்தில் நடைபெற்று வருகிறது. அதேபோல் இந்த ஆண்டும் மாசி மகத் திருவிழாவிற்காக நேற்று காலை கள்ளர் வேடத்தில் பெருமாள் பல்லக்கில் நரசிங்கத்திற்கு புறப்பட்டு சென்றார்.
செல்லும் வழியில் மண்டகப் படியில் தரிசனம் வழங்கி பின்னர் நேற்று இரவு ஆறு மணி அளவில் நரசிங்கம் சென்று அடைந்தார். அதன் பின்பு நள்ளிரவு ஒரு மணி அளவில் தெப்பத்திற்கு எதிரே உள்ள நான்கு கால் மண்டபத்தில் பெருமாள் கருட வேடத்தில் கஜேந்திர ஆழ்வாருக்கு மோட்சத்தை வழங்கி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
பின்பு அங்கிருந்து இன்று புறப்பட்டு மீண்டும் காலமேகப் பெருமாள் கோவிலை வந்து அடைகிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் பிரிதிபா, செயல் அலுவலர் மாலதி, பேஷ்கார் கண்ணன் மற்றும் கோவில் அலுவலர்கள் செய்திருந்தனர்.
