சேலத்தில் கோயில் பூசாரிகள் நலச்சங்க மாநில பொதுக்குழு கூட்டம்

சேலம் : சேலத்தில் கோயில் பூசாரிகள் நலச்சங்க மாநில பொதுக் குழு மற்றும் சங்கத்தின் 21ம் ஆண்டு துவக்க விழா நடந்தது.

மாநில தலைவர் வாசு தலைமை வகித்தார். செய லாளர் சங்கர் வரவேற்றார். நிர்வாகிகள் சுந்தரம், சிவக்குமார், கணேசன், சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் இருந்து சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், பூசாரிகள் குறைதீர்க்கும் கூட்டத்தை தொடர்ந்து நடத்த வேண்டும். ஊக்கத் தொகை என்பதை மாற்றி மாத ஊதியமாக ரூ.6 ஆயிரம் வழங்க வேண்டும். பூசாரிகளுக்கு அடையாள அட்டை, துறை ரீதியான ஓய்வூதியம் வழங்க வேண் டும். பூசாரிகளுக்கு விருது வழங்கி கவுரவிக்க வேண் டும். இலவச பஸ் பாஸ் வழங்கவேண்டும். கோயில் நிலங்களில் உழுது பயிர் செய்து வரும் மற்றும் வீடு கட்டியுள்ள பூசாரிகளை வெளியேற்றக்கூடாது என் பன உள்ளிட்ட கோரிக்கை கள் தீர்மானங்களாக நிறை வேற்றப்பட்டது.

தொடர்ந்து, மாநில தலைவர் வாசு செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘ சட்டமன்ற தேர்தலில் எங்களுடைய 35 அம்ச கோரிக்கைகளை, தேர்தல் வாக்குறுதியாக யார் அறிவிக்கிறார்களோ அவர்களுக்கு பூசாரிகள் சங்கத்தின் 25 லட்சம் பேர் ஆதரவு அளிப்போம்,’ என்றார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed