தொண்டாமுத்தூர் ஒன்றிய ஏ.ஐ.ஒய்.எப் சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்கம்…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

பாலியல் வன்முறை, போதை கலாச்சாரம், சாதி, மதவெறி இல்லாத தமிழ்நாடு உருவாக தமிழ்நாடு முழுவதும் ஏ.ஐ.ஒய்.எப் சார்பில் 1 கோடி கையெழுத்து இயக்கம் ஜூலை 5 துவங்கி 25 வரை நடைபெற்று வருகிறது.

அதன் தொடர்ச்சியாக தொண்டாமுத்தூர் ஒன்றிய ஏ.ஐ.ஒய்.எப் சார்பாக 12/07/2026 இன்று கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கோவை மாவட்ட துணைத்தலைவர் என். கணேச மூர்த்தி தலைமையேற்றார். மாவட்ட குழு உறுப்பினர் எஸ். வசந்தகுமார் முதல் கையெழுத்திட்டு துவங்கி வைத்தார்.

வட்டாரச் செயலாளர் ஆர். விஜயகுமார், கே. அபினவ், ஆர். ராஜன், கே. ஆறுச்சாமி, எஸ். திவ்யா, எஸ். சதீஸ்குமார்,எம். கலைமணி, எம்.கே. பலராம், சி. செல்வராஜ், ஆர். சுந்தர்ராஜ், எஸ். ஸ்ரீராம், ஏ. ராமசாமி, ஏ. ஆல்பர்ட் மற்றும் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தொண்டாமுத்தூர் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் நினைவு நற்பணி மன்ற தலைவர் டாக்டர் மா. சிவக்குமார், சி. வருண் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கையெழுத்து பெற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed