நாகர்கோவில் : காயமடைந்த அரிய வகை ‘கூகை’ ஆந்தை மீட்பு, இரவிலும் விரைந்தோடிய வனத்துறையினர்…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார், சின்ன அரிப்புத் தெரு பகுதியில் காயமடைந்து பறக்க முடியாமல் தவித்த அரிய வகை கூகை (Barn Owl) ஆந்தையை பொதுமக்கள் உதவியுடன் வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.


இப்பகுதியில் இரவு 11 மணி அளவில் அடிபட்டு சோர்வாகக் கிடந்த இந்தப் பறவையைப் பார்த்த பொதுமக்கள், உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர்.

பூதப்பாண்டி வன சரக அலுவலர் அன்பழகன் தலைமையில் வேட்டை தடுப்பு காவலர் ராஜன் மற்றும் இரவு காவலர் முனியாண்டி விரைந்து வந்து, பறவையை கவனமாக மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக எடுத்துச் சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed