மனிதி வெளியே வா…!! புத்தக வெளியீட்டு விழா…!! மகளிர் தின விழா…!! மார்ச் 8 தமிழக தலைநகர் சென்னையில்…!! எழுத்தாக்கம் : எழுத்தாளர், பத்திரிக்கையாளர் தனுஜா ஜெயராமன், சிறப்பாசிரியர் அக்கப்போர் இணைய நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

இனி, எழுத்தாளர், பத்திரிக்கையாளர் தனுஜா ஜெயராமன் பேசுகிறார்;

இது நீண்ட நாள் திட்டம் தான். ஆனால் இப்போது தான் நிறைவேறும் தருணம் வந்திருக்கிறது.

நிறைய தொழில்முனைவோர் சாதனை பெண்களை சந்தித்து அவர்களது அனுபவங்களை கண்டும் கேட்டும் அறிந்திருக்கிறேன். அவர்களில் சிலரை நேர்காணல் செய்து புத்தகமாக வெளியிடும் எண்ணம் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே இருந்தது.

கடந்த இரு மாதங்களாக முயன்று அதை புத்தகமாக கொண்டு வந்திருக்கிறேன். அதை ஒரு பெரிய விழாவில் வெளியிடும் பாக்யமும் கிடைத்திருக்கிறது.

அதை லயன்ஸ் கிளப் விழாவுடன் இணைந்து நடத்தும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. கூடவே மகளிர் தினத்தினை முன்னிட்டு சாதனை மகளிர் பலருக்கு விருது வழங்கும்
நிகழ்வினையும் நடத்த இருக்கிறோம்.

அன்று முழுவதும் மகளிர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது. என்னுடைய விழா நிகழ்வு 5 மணி முதல் 7 மணி வரை…

இதற்கு உறுதுணையாக இருந்த பல லயன்ஸ் கிளப் தோழமைகளுக்கும் , புத்தகமாக தொகுத்தவர்களுக்கும், சாதனை பெண்களுக்கும் அன்பும் நன்றிகளும்…!!

கல்வியாளர் பாலகுருசாமி அய்யாவுக்கு அருகு அறக்கட்டளை சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed