
மன ஆரோக்கியமும் ஜோதிடமும்…!!– ஜோதிடம் அறிவோம் தொடர் – 9 கோவை ஜோதிட கலையரசி M.தனம் B.A., போன் : 90802 73877 ஸ்ரீ தனம் ஜோதிட நிலையம். அக்கப்போர் நாளிதழ் akkappore.news

இன்றைய அதி வேக நவீன உலகில் மனித குலம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களில் ஒன்று மன ஆரோக்கியம் மன அழுத்தம் பதற்றம் மற்றும் மனசோர்வு ஆகிய அன்றாடம் நம் வாழ்வை முடக்கும் அளவுக்கு பெருகிவிட்டன மனிதன் இதன் இயந்திரத்தனமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
இதில் ஆரம்பப்பிரச்சனை எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்று பார்த்தால் கூட்டுக் குடும்பம் என்ற அமைப்பு இன்று சிதறிப் போய் இருக்கின்றது அதனால் பெரியோர்களின் அறிவுரைகள் அவர்களுடைய அனுபவங்கள் யாரும் கேட்க வாய்ப்பு இல்லை.
இன்றைய தலைமுறைகள்யாரும் கேட்க தயாராகவும் இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை. கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் சின்ன சின்ன பிரச்சனைகள் தவறுகள் நடந்தாலும் கூட பெரியோர்கள் அதை சமாளித்து பக்குவப்படுத்தி கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்தார்கள்.

இன்றைய சூழ்நிலையில் ஆண்களும் பெண்களும் சரிசமமாக படித்து வேலை வருமானம் இப்படி ஓடிக்கொண்டே இருக்கிறார்கள் ஒருவருடன் ஒருவர் மனம் விட்டு பேச கூட நேரமில்லை. குடும்பத்தில் முக்கியமான முடிவுகள் எடுக்கும் பொழுது அனைவரும் ஒன்றாக பேசி அவர்களுடைய கருத்துக்களை பகிர்ந்து ஒரு முடிவு எடுக்கும் பொழுது பிரச்சினைகள் குறையும்.
ஆனால் இன்று ஒருவர் என்ன வேலை செய்கிறார் அவருக்கு என்ன பிரச்சனை என்று குடும்பத்தில் உள்ள அனைவரும் தெரிந்து கொள்ளவே முடிவதில்லை பெண்களும் முதலில் குடும்பப் பெண்ணாக மட்டும் இருக்கும் பொழுது நிறைய ஓய்வு நேரங்கள் இருக்கும் வீட்டு வேலைகள் மட்டும் செய்து கொண்டு குடும்பத்தை பார்க்கும் பொழுது கடுமையாக உழைத்து வருமானத்தை கொண்டு வருகிறார்
அதனால் அவருக்காக விட்டுக் கொடுத்துப் போகும் தன்மையும் சகிப்புத்தன்மையும் பெண்களிடம் இருந்தது இன்றைய பெண்கள் சமமாக படித்து சம அளவில் வேலை வருமானம் இதை பெறும் பொழுது பெண்களும் அதிக அளவு உடல் உழைப்பு மனச்சோர்வு ஏற்படுகிறது.
அதனால் பெண்களுக்கு குடும்பத்தையும் பார்த்து வருமானத்தையும் கொண்டு வரும் பெண்களால் எதையும் தாங்கிக் கொள்ளும் பொறுமையும் சகிப்புத்தன்மையும் குறைந்துவிட்டது. அதனால் கணவர் மனைவிக்கிடையே மன இறுக்கங்கள் அதிகமாக இருக்கிறது இந்த மன இறுக்கங்கள் கோபம் எரிச்சல் குழந்தைகளிடம் வெளிப்படுகிறது.
இதைப் பார்த்த குழந்தைகள் அவர்களும் மனசோர்வுஅடைகிறார்கள் இதைப் பார்த்து குழந்தைகளும் அப்படியே பழகிக் கொள்கிறார்கள் சின்ன வயதில் இருந்தே டென்ஷன் படுத்தாதீங்க அப்படிங்கிற வார்த்தையை ஆறு வயது குழந்தை முதல் சொல்ல ஆரம்பித்து விட்டது.

.அந்த அளவுக்கு ஆறிலிருந்து அறுபது வரைக்கும் மன அழுத்தம் பதட்டம் மற்றும் மனசோர்வு ஆகியவை அன்றாட வாழ்க்கையை முடக்கும் அளவுக்கு பெருகிவிட்டன. நவீன மருத்துவம் மற்றும் உளவியல் இதற்கு பல்வேறு பிரச்சனைகளை வழங்கினாலும் தொன்மையான அறிவியலான ஜோதிடம் மனிதனின் மனம் ஆழமான அடுக்குகளை கிரகங்களின் அமைப்பைக் கொண்டு மிக துல்லியமாக கணிக்கிறது மனமது செம்மையானால் மந்திரம் ஜெபிக்க வேண்டாம் என்றார் அகஸ்தியர்.
அந்த மனதை செம்மையாக்குவதில் அந்த பலவீனங்களை முன்கூட்டே கண்டறிவதிலும் ஜோதிடம் பெரும் உதவியாக இருக்கிறது ஒருவருடைய மன அமைதி சிந்தனை திறன் மற்றும் உணர்ச்சி பெருக்கை கணிக்க ஜோதிட ரீதியாக பார்க்கலாம். சந்திரன் மனோகாரகன் சந்திரனே மனிதனுக்கு முழுமுதற் பொறுப்பாளி பூமியின் அலைகளையும் திரவங்களையும் கட்டுப்படுத்தும் சந்திரன் நம் உடலின் நீர் சத்தையும் மனிதனின் உணர்ச்சிகளையும் ஆளுகின்றார் சந்திரன்.
ஜாதகத்தில் பலமாக இருந்தால் தெளிவான நிலையான சிந்தனைகள் இருக்கும்.பலவீனமாக இருந்தால் ஊசலாடும் மனம் இருக்கும். எந்த ஒரு விஷயத்திலும் ஒருமனதாக முடிவு எடுக்கும் திறமை குறைவாக இருக்கும்.முடிவெடுப்பதில் மாறி மாறி பேசுவது ஒரு நிலையில்லாத தன்மையை கொடுக்கும்.
புதன் புத்தி காரகன் நரம்பு மண்டலத்திற்கு தர்க்க ரீதியாக புத்தி கூர்மையும் அதன் அதிபதி புதன் ஒரு பிரச்சனையை எதிர்கொள்ளும் போது பதட்டப்படாமல் விவேகமாக சிந்தித்து முடிவெடுக்கும் புதனின் பலம் அவசியம் எதையும் உற்று நோக்கும் பார்வையும் உண்மை தன்மையை அறிந்து கொள்ள தனது புத்தியை கொண்டு ஆராய்ந்து பார்ப்பார்.
ஜாதகத்தில் மனதை குறிக்கும் வீடு ஐந்தாம் வீடு ஒருவரின் என்ன ஓட்டங்களை ஆக்கபூர்வமான சிந்தனைகளையும் மற்றும் ஆழ்மனதத்தின் மகிழ்ச்சியும் தீர்மானிக்கிறது. மனநல பாதிப்புகளை தூண்டும் கிரக அமைப்புகள் ஜாதகத்தில் சில குறிப்பிட்ட கோள்களின் சேர்க்கையோ அல்லது மறைவோ ஏற்படும்போது அது மனிதனின் மனதை பல்வேறு நிலைகளில் பாதிக்கிறது.
சந்திரனும் நிழல் கிரகங்களான ராகுவும் கேதுவும் சந்திரன் + ராகு மதியை மயக்கும் அமைப்பு ராகு சந்திரனுடன் இணையும் பொழுது கிரக தோஷம் தேவையில்லாத கற்பனை பயம் மற்றும் இல்லாத ஒன்றை இருப்பதாக நினைத்து தவிக்கும் மனநிலை ஏற்படும் இவர்கள் எப்போதும் ஒருவித பாதுகாப்பு உணவற்ற சிந்தனையிலேயே இருப்பார்கள்.
சந்திரன் + கேது விரக்தி நிலை ஞான காரகன் ஆனது சந்திரனுடன் சேரும்பொழுது வாழ்க்கையில் பற்றற்று தன்மையும் கடுமையான மனச்சோர்வும் மற்றும் யாரோடும் ஒட்டாமல் தனிமையில் இருப்பது குணம் தலைதூக்கு சந்திரனும் சனியும் மகிழ்ச்சியின் காரணமான சந்திரனும் மந்த காரகனான சனியும் இணையும் போது அல்லது சம சப்தமாக பார்க்கும் பொழுது மன சஞ்சலம் இவர்களுக்கு ஏற்படும் .
சுப கிரகங்களின் பார்வை இந்த கிரக சேர்க்கையின் மீது இருந்தால் இதன் தாக்கங்கள் குறையும் சந்திரனும் செவ்வாயும் அதீததமான வேகம் மற்றும் கோபம் நெருப்பு கிரகமாக செவ்வாயும் நீர் கிரகமான சந்திரனும் இணையும் போது ஒருவித ஆகக் கொந்தளிப்பு ஏற்படும்.

இது அதிவேகமான கோபத்தையும் பொறுமையின்மையும் மற்றும் திடீர் உணர்ச்சிவசப்படுதல் என்ன செய்கின்றோம் என்ற நிலையை கூட புரிந்து கொள்ளாத மனநிலை கொடுக்கும் ஜாதகத்தில் லக்னம் என்பது ஸ்தூல உடலையும் சந்திரன் என்பது சூட்சம உடலையும் குறிக்கும். ஜாதகத்தில் லக்னாதிபதியோ அல்லது சந்திரனோ ஆறாம் அதிபதியுடன் அல்லது 8 12 ஆகிய மறைவு ஸ்தானங்களில் தொடர்பு கொள்ளும் பொழுது சாதாரணமான மன அழுத்தம் என்பது ஒரு நோயாகவே மாறுகிறது
மேலும் நரம்பு மண்டலத்துக்கு அதிபதியான புதன் கிரகம் கடுமையாக பாதிக்கப்படும் பொழுது அது மூளையின் வேதியலின் சமநிலையை பாதித்து பதற்ற நோய் மற்றும் நரம்பு தளர்ச்சி ஏற்படுகிறது. ஜோதிடம் என்பது பயமுறுத்தும் கருவி அல்ல அது ஒரு வழிகாட்டி கிரகங்களின் எதிர்மறை கதிர்வீச்சுகளால் ஏற்படும் மனப்போராட்டங்களை சீரமைக்க எளிய வாழ்வியல் மற்றும் ஆன்மீக பரிகாரங்கள் உதவுகின்றன.
சந்திரனை பலப்படுத்த மன அமைதிக்கு தியானம் மற்றும் பிராணாயாமம் சந்திரனின் தத்துவம் நீர் தினமும் காலையில் மூச்சுப் பயிற்சி செய்வதும் தியானத்தில் ஈடுபடும் சந்திரனின் ஆற்றல்களை சீரமைக்கும். பௌர்ணமி நாளில் நிலா ஒளியில் அமர்வதும் குலதெய்வ வழிபாடும் மற்றும் அம்மன் கோயில்களுக்கு சென்று வருவது மனதிற்கு பேரமைதியைத் தரும்.
தாயாரின் உடல்நிலை கவனிப்பது முதியோர்களுக்கு உதவுவது சந்திரன் எதிர்மறை ஆற்றல்களை குறைக்கும். அதேபோல் புதனை பலப்படுத்த புத்தி தெளிவடைய புத்தகங்கள் வாசிப்பது மற்றும் மூளைக்கு வேலை கொடுக்கும் பயிற்சிகள் நரம்பு மண்டலத்தை தூண்டி புதனை வலுவாக்கும்.

குருவின் பார்வை சந்திரனுக்கு இருந்தால் எவ்வளவு பெரிய மன அழுத்தமும் முறையாக மனநல ஆலோசனைகள் மற்றும் தகுந்த மருத்துவ சிகிச்சையின் மூலம் மிக எளிதாக குணமாகிவிடும். மனம் போல் வாழ்வு என்பது வெறும் பழமொழி அல்ல அதுவே பிரபஞ்ச விதி கிரகங்கள் நம் மனதை இயக்கினால் நம்முடைய விழிப்புணர்வாலும் சரியான வாழ்வியல் மாற்றங்களினாலும் மனதை நாம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும்
ஒருவருடைய ஜாதகத்தை முன்கூட்டியே ஆராய்வதன் மூலமாக அவர்களுக்கு ஏற்ற காலத்தில் மன ரீதியான சோதனைகள் வரக்கூடும் என்பதை அறிந்து அந்த காலகட்டத்தில் அவர்களுக்கு தியானம் ஆன்மீகம் மற்றும் நவீன மருத்துவத்தின் மூலம் தங்களை காத்துக் கொள்ள ஜோதிடம் ஒரு சிறந்த முன்னெச்சரிக்கை கருவியாகவே செயல்படுகிறது. விதியை மதியால் வெல்ல இதுவே மிகச் சிறந்த வழி.



