

இளையராஜாவை விட சினிமாவில் எஸ். ஜானகி அம்மா 18 ஆண்டுகள் சீனியர் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? சுபத்ரா தேவி தனசிங், சக்தி இயக்கம், இந்திய தேசிய காங்கிரஸ். அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க
பலருக்கு, இளையராஜா அறிமுகப்படுத்திய பாடகி ஜானகி அம்மா என்ற தவறான எண்ணம் இருக்கிறது. ஆனால் உண்மை அதற்கு நேர்மாறானது.
அன்னக்கிளி திரைப்படத்தில் இளையராஜா முதன்முறையாக இசையமைத்தபோது, ஜானகி அம்மா ஏற்கனவே 18 ஆண்டுகளாக இந்தியத் திரையுலகில் பாடி வந்த மூத்த கலைஞர். ஒரு புதிய இசையமைப்பாளரின் முதல் தேர்வாக ஜானகி அம்மாவை நினைத்தார் இளையராஜா.
அந்தப் புதிய இசையமைப்பாளரின் திறமையை நம்பி, எந்த ஈகோவும் இல்லாமல் பாட சம்மதித்தார் ஜானகி அம்மா. அதன் விளைவு? “அன்னக்கிளி உன்னைத் தேடுதே…” தமிழ் இசை வரலாற்றையே மாற்றிய பாடலாகியது.
அடுத்த நாற்பது ஆண்டுகள், வானொலிகளில் ஒலித்துக் கொண்டே இருந்தது ஒரு அறிவிப்பு: “இசை: இளையராஜா… பாடியவர்: எஸ். ஜானகி.” நூற்றுக்கணக்கான புதிய பாடகிகள் வந்தார்கள். இசை உலகம் மாறியது. ஆனால் ஜானகி அம்மாவின் இடம் மட்டும் மாறவில்லை. அவருடைய குரலும், பணிவும், மனிதநேயமும் என்றும் குறையவில்லை.

ஆனால், அவருக்குக் கிடைக்க வேண்டிய தேசிய அங்கீகாரம் மட்டும் தொடர்ந்து தாமதமானது.SPB க்கு 2001 இலேயே,கமல்ஹாசனுக்கு 1990 இலேயே, வைரமுத்துவுக்கு 2003 லேயே பத்ம ஶ்ரீ தந்து விட்டார்கள். AR Rahman 2000 பத்ம ஶ்ரீ மற்றும் 2010 பத்ம பூசண் தந்தார்கள். 2010 இளையராஜாவுக்கு பத்மபூஷண்.
ஒவ்வொரு வருடமும் பத்ம அறிவிப்பு லிஸ்டில் தனது பெயரை தேடி இருக்க வேண்டும் ஜானகி அம்மா. திரைத்துறையில் 55 ஆண்டுகள் நிறைவடைந்த பிறகுதான் ஜானகி அம்மாளுக்கு பத்ம பூஷண் அறிவிக்கப்பட்டது. அதை அவர் ஒரே ஒரு வார்த்தையில் நிராகரித்தார்: “Too Late.” அது வெறும் விருதை மறுத்த பதில் அல்ல.
ஒரு பெண்ணின் உழைப்பை, திறமையை, பங்களிப்பை ஏன் இவ்வளவு காலம் கண் திறந்து பார்க்க மறுத்தீர்கள்? என்ற அமைதியான கேள்வி.

அந்த ஒரு வார்த்தை, நம் சமூகத்தின் மனசாட்சியையே கேள்விக்குள்ளாக்கியது. இது ஜானகி அம்மாவின் கதை மட்டுமல்ல. நம் சமூகத்தில் பெண்கள் பெரும்பாலும் ஆண்களை விட இருமடங்கு உழைக்க வேண்டும்; இருமடங்கு திறமையை நிரூபிக்க வேண்டும்; குற்றமற்றவர்களாக இருக்க வேண்டும். ஆனால் அங்கீகாரம் மட்டும் சமமாக வருவதில்லை.
பெண் எப்போதும் போதுமான தகுதி பெறாதவளாகவே தோன்றுவது பல நூறு வருடங்களாக இருக்கும் நிலை. ஆண் தவறே செய்தாலும், அவன் அப்படித்தான் அது அவன் ஸ்டைல் என்று கடந்து போவது வாடிக்கை. இன்றும் உயரிய விருதுகளை முடிவு செய்யும் குழுக்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் மிகவும் குறைவு.
சுமார் 80% ஆண்களே பத்ம விருதுகள் தேர்வு கமிட்டியில் இருக்கிறார்கள். முடிவெடுக்கும் மேசையில் பெண்கள் இல்லாதபோது, பெண்களின் சாதனைகள் தாமதமாகவே கண்ணில் படுகின்றன. எஸ். ஜானகி அம்மா ஒரு பாடகி மட்டுமல்ல.
ஒரு காலத்து பெண்களின் கண்ணாடி. ஒரு தேசம் இன்னும் முழுமையாக மதிக்கத் தவறிய மகத்தான கலைஞர். உன்னத மனிதி! அவருக்கு எங்கள் அஞ்சலி.
#RIPJanakiAmma #Women50% சுபத்ரா தேவி தனசிங், சக்தி இயக்கம், இந்திய தேசிய காங்கிரஸ். ShaktiAbhiyan.in

