45 பவுன் நகையை உரியவரிடம் ஒப்படைத்த பெண் தூய்மைப்பணியாளர் பத்மாவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி பாராட்டு…!! தமிழ்நாடு குறவர்கள் பேரவை தலைவர் செல்வராஜ் நெகிழ்ச்சி..!! அக்கப்போர் நாளிதழ் Akkappore.news சொடுக்குங்க

தூய்மை பணியின் போது கீழே கிடந்த 45 பவுன் நகையை உரியவர்களிடம் ஒப்படைத்த பத்மா அவர்களை தனது வீட்டுக்கு நேரில் வரவழைத்து தங்க சங்கிலி அணிவித்து ஐயா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
மரியாதை செய்தார்.

இதற்காக அவரை தமிழ்நாடு குறவர்கள் பேரவை வணங்குகிறது.

அனைத்து பத்திரிகையாளர்களுக்கு வணக்கம்,

பத்திரிகைகள் என்பது நமது நாட்டின் ஜனநாயக நான்காவது தூண் என்பதை நாம் அறிவோம்

கீழே கிடந்த பொருள்களை ஒரு நூறு ரூபாய் தாள் இருந்தால் கூட நான்கு பக்கமும் பார்த்துவிட்டு அதை அப்படியே எடுத்து நமது பையில் வைத்துக் கொள்வோம் நான் உள்பட உரியவர்கள் கேட்டால் கூட ஒப்படைக்க மனம் வராது

ஒரு சாதாரண ஏழை பெண்மணி கீழே கிடந்த அந்த தங்க பொருட்களை உரியவரிடத்தில் ஒப்படைத்து இருக்கிற பத்மா அம்மா அவர்களை நாம் அனைவரும் போற்ற வேண்டும் .

கொலை, கொள்ளை கற்பழிப்பு சம்பவங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய நமது பத்திரிகைகள்

இப்படிப்பட்ட செய்திகளை தலைப்பு செய்தியாக பதிவு செய்ய வேண்டும்

நல்ல செயல்களை செய்து அதன் விளைவாக வருகிற அந்த பாராட்டுக்கள் சாதாரணமானது அல்ல…!!

ஒருவரை பார்த்து ஒருவர் நல்ல வழியில் நடப்பதற்கு ஐயா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை போன்று வீடு தேடி சென்று பாராட்டுவார்கள் நல்லது செய்தவர்களை இந்த நாடும் நலம் பெறும்

இப்படிப்பட்ட செய்திகளை பத்திரிகைகள் முக்கிய செய்தியாக முதன்மை செய்தியாக வெளியிட வேண்டும் என்ற அன்போடு கேட்டுக்கொள்கிறேன்

தமிழ்நாடு குறவர்கள் பேரவை

செல்வராஜ்
தலைவர்.

3.2.26

அக்கப்போர் நாளிதழ், செய்திப்பிரிவு Akkappore.News சொடுக்குங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed