N.ரவிச்சந்திரன், மதுரை மாவட்ட தலைமை செய்தியாளர், மூத்த பத்திரிக்கையாளர், செய்திப்பிரிவு, ‘அக்கப்போர்’ நாளிதழ்
Akkappore.news
Akkappore.com
/ Just CliCK now

பூத்து குலுங்கும் சூரியகாந்தி பூக்கள்…

.N.ரவிச்சந்திரன், மதுரை மாவட்ட தலைமை செய்தியாளர், மூத்த பத்திரிக்கையாளர், செய்திப்பிரிவு, ‘அக்கப்போர்’ நாளிதழ்
Akkappore.news
Akkappore.com
/ Just CliCK now

உசிலம்பட்டி.

பிப்,24,2026
உசிலம்பட்டி அருகே, மஞ்சள் போர்வை போர்த்தியது போல சூர்யகாந்தி பூக்கள் பூத்து குலுங்குவதால் – உசிலம்பட்டி வழியாக செல்லும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.


மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே நக்கலப்பட்டி கிராமத்தில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் சூர்யகாந்தி சாகுபடி செய்துள்ளனர்.


தற்போது,
இந்த சூர்யகாந்தி செடிகள் வளர்ந்து பூக்கள் பூத்து குலுங்குகின்றன. மஞ்சள் போர்வை போர்த்தியது போன்ற ரம்யமாக காட்சியளிக்கிறது.
இந்த சூர்யகாந்தி மலர்கள்,
மதுரை, தேனி தேசிய நெடுஞ்சாலை ஓர பகுதியில் அமைந்துள்ள தோட்டத்து பகுதியில் பூத்து குலுங்கும் இந்த சூர்யகாந்தி மலர்களை அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கார் மற்றும் இருசக்கர வாகனங்களை நிறுத்தி சூர்யகாந்தி மலர்களுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.


பூத்து குலுங்கும் இந்த சூர்யகாந்தி மலர்கள் அடுத்தடுத்து எண்ணெய் வித்துக்களாக முதிர்ச்சி அடைவதற்குள் கிளிகள் மற்றும் பறவைகளிடம் இருந்து பாதுகாப்பதை விட, காட்டு பன்றிகளின் அட்டகாசமும் அடிக்கடி நிகழ்வதால் காட்டுப் பன்றிகளிடமிருந்து இந்த சூர்யகாந்தி பயிர்களை பாதுகாக்க அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

N.ரவிச்சந்திரன், மதுரை மாவட்ட தலைமை செய்தியாளர், மூத்த பத்திரிக்கையாளர், செய்திப்பிரிவு, ‘அக்கப்போர்’ நாளிதழ்
Akkappore.news
Akkappore.com
/ Just CliCK now

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed

error

Enjoy this blog? Please spread the word :)