

மகளிர் தின சிறப்பு கவிதை
அவள் மௌனம் பலவீனம் அல்ல…
அது எரிமலை வெடிப்பதற்கு
முந்தைய ஆழ்ந்த அமைதி!!!திசைகளை ஆளும் தேவதை அவள்…!! மகளிர் தின சிறப்பு கவிதை கவிஞர் உமா ஸ்கந்தவேள் அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

பெண்— பேரண்டத்தின் பெரும் சீற்றம் அவள்…
யார் சொன்னது மென்மை என்று?
அவள் வெறும் பூவல்ல
பாறையைத் துளைக்கும் வேர்!!!
அடங்கிப் போகும் நதியல்ல
கரைகளை உடைக்கும் வெள்ளம்!!!
அமைதி காக்கும் மேகமல்ல
மின்னலைச் சுமந்த கருமேகம்!!!
விலங்குகளை உடைக்கும் விஸ்வரூபம் அவள்…!!
கட்டுப்பாட்டு வேலிகளை அவள்
கயிறுகளாய் மாற்றுவாள்…
அச்சத்தின் திரைகளை அவளது
அறிவால் கிழித்தெறிவாள்…!!
அவள் மௌனம் பலவீனம் அல்ல…
அது எரிமலை வெடிப்பதற்கு
முந்தைய ஆழ்ந்த அமைதி!!!திசைகளை ஆளும் தேவதை அவள்…!!
சமையல் புகையையும் தாண்டி
சரித்திரப் பக்கங்களில் அவள்
பெயரைத் தீயால் எழுத கூடியவள்…
இந்த உலகம் வகுத்த எல்லைகளை
அவள் கால்களால் மிதித்துச் செல்வாள்…
அழகு என்பது வெறும் அலங்காரமல்ல அவளுக்கு…
அவள் விழிகளில் மின்னும்
தன்னம்பிக்கை அது…
அவள் சொற்களில் தெறிக்கும்
உண்மை அது…!!
நிமிர்ந்த அவளது முதுகெலும்புதான்
இந்த பிரபஞ்சத்தைத் தாங்கும்
மகா அச்சாணி!!!
குனிந்து நடக்க அவள் அடிமையல்ல
நிமிர்ந்து பார்த்து நிலவை ஆள்பவள்!
பிரபஞ்சத்தின் பேரழகு என்பது
அவள் முகம் மட்டுமல்ல…
அடங்க மறுக்கும் அவளின் ஆளுமை!!!
இப்படிக்கு
மனிதி ….
—- கவிஞர் உமா ஸ்கந்தவேள்
என் இனிய மகளிர் தின நல்வாழ்த்துகள்…

🎉🥳🙏🍫🦋
செய்திப்பிரிவு, அக்கப்போர் நாளிதழ்


