
பழ.நெடுமாறன் அய்யா 94-வது பிறந்தநாள் இன்று…!! அவருக்கு விடுதலைப்புலிகள் தலைவர் வே.பிரபாகரன் எழுதிய ரகசிய கடிதத்தை மூத்த வழக்கறிஞர், அக்கப்போர் நாளிதழ் சிறப்பாசிரியர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டார்…!! akkappore.news சொடுக்குங்க

வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்
பழ.நெடுமாறன் அய்யா 94வது பிறந்தநாள் இன்று…!!
அவருக்கு தேசியத்தலைவர் வே.பிரபாகரன் எழுதிய கடிதத்தை மூத்த வழக்கறிஞர், அக்கப்போர் நாளிதழ் சிறப்பாசிரியர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டார்…!!

இந்த கடிதம் 1989 ம் ஆண்டு எழுதப்பட்டது.
தமிழீழம்.
22-12-89
அன்பின் அண்ணாவிற்கு
நீண்ட நாட்களுக்குப்பின் உங்களுக்கு இக் கடிதத்தை எழுதுகிறேன்.
அண்ணா
உங்களுக்கு கடிதம் எழுதுவதைவிட உங்களுடன் நேரில்
மனம் விட்டுப் பேசவே
நான் விரும்புகிறேன் அண்ணா அதேவேளை கடலில்
நீங்கள் அபாயத்திற்குள்ளாக வரவேண்டி ஏற்படுமே என்று
நான் யோசிக்கிறேன்.
இப்போதுதான் நாங்கள் இலங்கையுடன் பேசுகிறோம் ஆதலால் நீங்கள் ஒரு தடை இலங்கை வருவதற்கு நேரடியாக விசா கேட்டுப் பாருங்கள் அண்ணா.
என்னவோ தெரியவில்லை உங்களை நேரில் சந்திக்க ஆசையாய் உள்ளது மற்றும்
உமா எப்படி சுகமாய் இருக்கிறவா அவவிற்கு எனது அன்பை தெரிவிக்கவும்.
அக்கா, இனியன் எல்லோரையும் நான் விசாரித்ததாக சொல்லவும்,
ஆறுமுகம் அண்ணாவை நான் கேட்டதாக சொல்லவும்.
இக் கடிதம் கொண்டு வருபவரிடம் விபரமாக நேரில் சொல்லியிருக்கிறேன் அண்ணா. வேறு விடயமில்லை.
இப்படிக்கு
உங்கள் அன்பு தம்பி
வே.பிரபாகரன்.
இப்படி முடிகிறது, அந்த கடிதம்…!! இந்த கடிதத்தில் அர்த்தங்கள் உள்ளது. அது புரிந்தவர்கள் அய்யாவும் தேசியத் தலைவரும் மட்டும்…!!
செய்திப்பிரிவு, அக்கப்போர் நாளிதழ்.
