

அன்னூர் சொக்கம் பாளையம் சமூக நீதி மாணவியர் விடுதியில் கர்மவீரர் காமராஜர் அவர்களின் 124 வது ஆண்டு பிறந்தநாள் விழா அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க
கோவை வடக்கு மாவட்டம் டி.வி.கே டாஸ்மாக் தொழிற்சங்கம் சார்பில் அன்னூர் சொக்கம் பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் சமூக நீதி மாணவியர் விடுதியில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 124 வது ஆண்டு பிறந்தநாள் விழா குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் எழுது பொருள்கள் வழங்கியும், ஹாஸ்டலுக்கு தேவையான மிக்ஸி, ப்ளூ ட்ரம் ஆகியவை வழங்கி கொண்டாடப்பட்டது


விழாவிற்கு சங்க நிர்வாகி எம். மாணிக்க ராஜ் தலைமையேற்றார். விடுதி காப்பாளர் திருமதி பானுமதி அனைவரையும் வரவேற்றார். விழாவில் சிறப்பு விருந்தினராக தொண்டாமுத்தூர் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் நினைவு நற்பணி மன்றத் தலைவர் டாக்டர் மா. சிவக்குமார், மற்றும் டி.வி.கே நிர்வாகிகள் எம். சுபாஷ், ஏ. இடமலை, பெ. ஆனந்தகுமார் மற்றும் செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு விடுதிக்கு தேவையான பொருட்களை வழங்கி வாழ்த்துரை வழங்கினார்.விழாவில் மாணவியர்கள் மற்றும் சமையல்காரர் தனலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

