இளம் இதயங்களில் நம்பிக்கையை விதைக்கும் அருகு அறக்கட்டளை…!! நிறுவனர் – தலைவர், பத்திரிக்கையாளர், கவிஞர் ஆர்.கே.விக்கிரம பூபதி M.A.,MPhil., அழைப்பு….!! அக்கப்போர் நாளிதழ், Akkappore.news சொடுக்குங்க

இயற்கை அன்னையை காக்கவும் மண்ணை மீட்கவும் மரக்கன்று நடு வதை இளம் சமூகத்தினர் உள்ளங்களிலும் ஒவ்வொரு இல்லங்களிலும் விதைக்க …

அருகு அறக்கட்டளை புதிய முயற்சி…!!

மரக்கன்று நடும் பொறுப்பை 13 வயதிற்கு கீழ் உள்ள நம்பிக்கை நட்சத்திரங்களிடம் ஒப்படைக்கிறோம்…!!

பாலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடப்படும் ஒவ்வொரு மரக்கன்றுக்கும் வலை பொருத்தி, கம்பி நட்டு-

பராமரிப்பு: மாணவி பெயர் பொறிக்கப்படும். அந்த மரக்கன்று வளரும்போதும் நிழல் தரும்போதும் தன்னை ஆளாக்கிய அன்னையான பள்ளிக்கு அவர்கள் தரும் நன்றி பரிசாகவும் இயற்கைக்கு அளித்த கொடையாகவும் மாறி மகிழ்ச்சி தரும் என்பதில் சந்தேகமில்லை..

அருகு அறக்கட்டளை இன்று சத்தமில்லாமல், மரம் வளர்ப்போம்… என்னும் இலட்சிய விதையை விதைக்கிறது.

பயனும், பலனும் காலம் பதில் சொல்லட்டும்.

இந்த உன்னத பணியில் நம்முடன் இணைந்து கரம் கொடுக்கும் இயற்கை ஆர்வலர்கள், சமூக உணர்வாளர்கள், மேனாள் துணை வேந்தர் முனைவர் பாலகுருசாமி அய்யா உள்ளிட்ட கல்வியாளர்கள், சான்றோர்கள்… நல்ல உள்ளங்கள் ….

பாலத்துறை ஊராட்சி ஒன்றிய ஆசிரியப் பெருமக்கள் …. உள்ளிட்ட அனைவருக்கும் பெரும் நன்றிகளும்…பேரன்பும்…!!

இப்படிக்கு….

ஆர்.கே (விக்கிரம) பூபதி

நிறுவனர் – தலைவர்,
அருகு அறக்கட்டளை

உதவி ஆசிரியர்,
செய்திப்பிரிவு
தினகரன் நாளிதழ்
கோவை பதிப்பு

வாட்சப் 99443 28589

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed