சனி தரும் சோதனைகளும், சாதனைகளும்…!!

– கோவை ஜோதிட கலையரசி M.தனம் B.A., போன் : 90802 73877 ஸ்ரீ தனம் ஜோதிட நிலையம். அக்கப்போர் நாளிதழ் ஜோதிடம் அறிவோம் தொடர் – 8*
ஜோதிடத்தில் சனி பகவான் மிகவும் முக்கியமான கிரகமாக கருதப்படுகிறது பலர் சனியை பயமுறுத்தும் கிரகமாக நினைத்தாலும் உண்மையில் சனி மனிதனை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லக் கூடியவர் சனி தரும் சோதனைகள் கடினமானதாக இருந்தாலும் அவை மனிதனுக்கு நல்ல ஒரு பக்குவத்தையும் அனுபவத்தையும் கொடுத்து விடுகிறது.
வாழ்க்கையில் நிலையான சாதனைகளையும் வாழ்க்கை தரத்தை ஏற்படுத்தும். சனி என்பது கர்மத்தின் நீதிபதி ஒருவர் செய்த நன்மை தீமை ஆகியவற்றிற்கு ஏற்ப பலனை வழங்கும் கிரகமாக சனி பகவான் விளங்குகிறார்.
சூரிய குடும்பத்தில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனி பகவான் உள்ளார். சனியின் குணம் என்னவென்றால் பொறுமை ,ஒழுக்கம் ,கடமை உணர்வு, உழைப்பு ,நீதி, மற்றும் தியாகத்தை தருகிறது.

உழைத்தால் மட்டுமே உயர்வை தரக்கூடியவர் சனிபகவான். அவருடைய குணம் என்று பார்த்தால் தாமதம் பொருளாதார சிக்கல் உறவுகளில் சோதனை உடல் நல பிரச்சனை தனிமை உணர்வு இவை எல்லாம் சனி பகவானுடைய சோதனைகளாகவே இருக்கும். சனி இருக்கும் இடத்தில் பலன்கள் உடனடியாக கிடைக்காது அவர் ஏழாம் பாவத்தில் இருந்தால் அவருக்கு திருமணம் அமைவதில் தாமதம் ஏற்படும் நாலாம் பாவத்தில் இருக்கும் பொழுது அவருக்கு வீடு அமைவதில் தாமதங்கள் ஏற்படும்.
சொத்து வாங்குவதில் தடைகளும் ஏற்படும் ஆனால் அந்த தாமதம் பின்னாளில் நிலையான வெற்றியைத் தரும். சனி திசை அல்லது தனியின் பாதிப்பு அடையும் காலங்களில் பண வரவு குறையலாம் கடன்கள் செலவுகள் அதிகரிக்கலாம் இதன் மூலம் பணத்தின் மதிப்பை உணர செய்கிறார் நண்பர்கள் உறவினர்கள் மூலம் ஏமாற்றங்கள் ஏற்படலாம் உண்மையான உறவுகள் யார் என்பதை அறிய சனிபகவான் வழி காட்டுவார்.

உடல்நிலையில் அடிக்கடி பாதிப்பு ஏற்படும் மூட்டு வலி நரம்பு பிரச்சனை எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் நீண்ட நாளாக உடல் நலக் குறைபாடுகள் போன்றவற்றையும் ஏற்படுத்துவார்.
கால் வலி பாதம் போன்ற உறுப்புகளில் அறுவை சிகிச்சை நிலை ஏற்படும்.
சனி திசை புத்தி காலங்களில் பலர் தனிமையையும் மன அழுத்தத்தையும் அனுபவிப்பார்கள் ஆனால் இந்த காலம் சுய பரிசோதனைக்கு ஏற்ற நேரமாக அமையும் ஏழரை சனி அஷ்டம சனி ஒருவர் ராசிக்கு 12,1 ,2 ஆகிய இடங்களில் சனி வரும்போது ஏழரை சனியாகவும் எட்டாம் இடத்துக்கு வரும் பொழுது அஸ்தமச்சனியாகவும் மாறுகிறார்.
இந்த காலகட்டங்களில் சோதனைகள் கடுமையாக இருக்கும் நாலாம் நாலாம் இடத்திற்கு வரும்பொழுது அர்த்தாஷ்டமம் தனியாக இருப்பார்.
அப்போது ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்துவார்.
சனிபகவான் தரும் சோதனைகள் தண்டனை அல்ல அது மனிதனின் அகந்தையை அளித்து அவனை சுத்தப்படுத்தும் ஒரு ஆன்மீக அறுவை சிகிச்சை என்று கூறலாம்.
சனி பகவானின் சாதனைகள் சனியைபோல் கொடுப்பாறும் இல்லை சனியைப்போல் கெடுப்பவரும் இல்லை என்பது பழமொழி. சோதனை காலம் முடிந்தவுடன் சனி பகவான் தரும் பலன்கள் ஒருவரின் வாழ்க்கையின் உச்சத்திற்கு கொண்டு செல்லும் இதையே சனிபகவானின் சாதனைகள் என்கிறோம்.

சமூக அந்தஸ்து மற்றும் புகழ் சனி பகவான் ஒருவனுக்கு நல்ல பலன்களை தரும் குறிப்பாக 3 ,6, 11 ஆகிய இடங்களில் இருக்கும் பொழுது அவருக்கு பெயர் புகழை பதவியையும் அரசியலில் அல்லது தொழில் மாபெரும் வெற்றியைத் தரும்.
தனி தரும் வெற்றி மெதுவாக வரும் ஆனால் அது நீண்ட காலமாக நிலைத்திருக்கும் சனி அருளால் கிடைத்த பதவி செல்வம் புகழ் எளிதில் அழியாது. சனிபகவான் தலைமைத்துவத்தை கொடுப்பார்.
அரசியல்வாதிகள் நீதிபதிகள் நிர்வாகிகள் தொழில் அதிபர்கள் போன்ற பலர் சனியின் அருளால் உயர்ந்த பதவிகளை அடைகிறார்கள்.
சனி வாழ்க்கையின் சிரமங்களை எதிர்கொள்ளும் மன உறுதியை அளிக்கிறது தோல்விகளைக் கூட வெற்றிக்கான படிக்கட்டாக மாற்ற கற்றுக் கொடுக்கின்றது.
சனியின் சோதனைகளை தாண்டியவர்கள் வாழ்க்கையின் உண்மையான தத்துவத்தை புரிந்து கொண்டவர்கள் அவர்களிடம் பேராசை ஆணவம் மறைந்து அமைதியும் ஆன்மீக சிந்தனையும் மேலோங்கும் மனிதனை இறைவனின் நோக்கி திருப்புகிறது.

சனி பகவானின் அருளை பெற சில வழிமுறைகள் நேர்மையாக வாழ்வது பிறரை ஏமாற்றக்கூடாது. உழைப்பை நம்ப வேண்டும்.
ஏழை எளிய மக்களுக்கு உதவ வேண்டும் .உடல் ஊனமுற்றவர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். முதியோர்களை மதிக்க வேண்டும்.
பொறுமையுடன் செயல்பட வேண்டும். நேர்மையாக நீதிநெறியோடு இருப்பவர்கள் கடுமையாக உழைப்பவர்களையும் சனி பகவான் எந்தவிதத்திலும் பாதிப்பதில்லை.
🌹

akkappore.news சொடுக்குங்க
