வெளியான கொங்கு மண்டல NDA வேட்பாளர் பட்டியல்…!! பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள்… அண்ணாமலை போட்டியிடும் தொகுதி எது.? கிணத்துக்கடவு தொகுதியில் வசந்தராஜனுக்கு வெற்றி உறுதி….!! அக்கப்போர் நாளிதழ், akkappore.news சொடுக்குங்க

வெளியான கொங்கு மண்டல NDA வேட்பாளர் பட்டியல்…!! பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள்… அண்ணாமலை போட்டியிடும் தொகுதி எது.? கிணத்துக்கடவு தொகுதியில் வசந்தராஜனுக்கு வெற்றி உறுதி….!! அக்கப்போர் நாளிதழ், akkappore.news சொடுக்குங்க

கொங்கு மண்டலத்தில் அதிமுக – பாஜக இரண்டு கட்சிகளும் மிக வழமையாக இருக்கும் நிலையில், தற்பொழுது இரண்டு கட்சிகளும் இணைந்து வரும் 2026 தேர்தலை சந்திக்க இருப்பது, கொங்கு மண்டலம் திமுக கூட்டணிக்கு எட்டா கனியாக அமைந்து இருக்கிறது. கொங்கு மண்டலத்தை கைப்பற்றுவதற்காக கடந்த 5 வருடமாக குட்டி கரணம் போட்டு வந்த திமுகவுக்கு வரும் தேர்தலில் கடந்த 2021 சட்டசபை தேர்தலில் கொங்கு மண்டலத்தில் என்ன நடந்ததோ அதே தான் நடக்கும் என்கிற சூழல் உருவாகி இருக்கிறது.

இந்நிலையில் கொங்கு மண்டலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்கிற இறுதி செய்யப்பட்ட தகவல் கசிந்துள்ளது. அதில் தொண்டாமுத்தூர் தொகுதியில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட இருக்கிறார், கிணத்துக்கடவு தொகுதியில் பாஜக சார்பில் அக்கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் வசந்தராஜன் போட்டியிட இருக்கிறார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிட்ட வசந்தராஜன் பாஜக கோவை தெற்கு மாவட்ட தலைவராக சிறப்பான செயல்பாடுகள் மூலம் பாஜக தலைமையின் நன்மதிப்பை பெற்றவர் , மேலும் உள்ளூர் நிர்வாகிகளிடம் சகஜமாக பழக்கூடிய வசந்தராஜன் கிணத்து கடவு தொகுதியில் போட்டியிட இருப்பதாக வெளியாகி உள்ள தகவல், அந்த தொகுதி பாஜகவினர் உற்சாகத்துடன் களப்பணிக்கு தயார் நிலையில் இருப்பதை பார்க்க முடிகிறது.

பொள்ளாச்சி தொகுதியில் அதிமுக சார்பின் முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன், சூலூர் தொகுதியில் அதிமுக சார்பில் கந்தசாமி,சிங்காநல்லுர் தொகுதியில் அதிமுக சார்பில் ஜெயராமன், கவுண்டபாளையம் தொகுதியில் அதிமுக சார்பில் அருண் குமார், மேட்டுப்பாளையம் தொகுதியில் அதிமுக சார்பில் செல்வராஜ், உடுமேலை பேட்டை தொகுதியில் அதிமுக சார்பில் ராதா கிருஷ்ணன்,

இதில் கடந்த முறை பாஜக போட்டியிட்டு வென்ற கோவை தெற்கு தொகுதியில் அதிமுக சார்பின் அம்மன் அர்ஜுனன் போட்டியிட இருக்கிறார், கோவை தெற்கு தொகுதியில் கடந்த முறை பாஜக சார்பில் போட்டியிட்டு வென்ற வானதி சீனிவாசன் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் கோவை வடக்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட இருக்கிறார்.

கொங்கு மண்டலத்தில் மடத்துக்குளம் தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு ஒதுக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது, அந்த கட்சியின் சார்பில் முன்னாள் அமைச்சர் சண்முகவேல் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது, இந்நிலையில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வரும் தேர்தலில் போட்டியிடுவாரா.? மாட்டாரா.? என்கிற விவாதத்திற்கு விடை கிடைக்கும் வகையில் அவர் போட்டியிடும் தொகுதி என்ன என்கிற தகவல் வெளியாகி இருக்கிறது.

பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கொங்கு மண்டலத்தில் பல்லடம் தொகுதியில் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொங்கு மண்டலத்தில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் , அமமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஒருவர் போட்டியிடுவது, பாஜக சார்பில் அண்ணாமலை, வானதி சீனிவாசன், வசந்த ராஜன் என முக்கிய தலைவர்கள் போட்டியிடுவது, கொங்கு மண்டலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி மட்டுமில்லை, வேட்பாளர்களும் வலுவாக இருப்பதால், கொங்கு மண்டலம் திமுகவுக்கு மிக பெரிய சவாலாக வரும் 2026 சட்டசபை தேர்தல் அமைந்துள்ளது.

அந்த வகையில் கொங்கு மணடலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியே வரும் தேர்தலில் ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

Scroll to Top